Tuesday, June 16, 2015

சக்தி பஜனை

ஓம் ஜெய ஜெய சக்தி
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய அனுதினம் பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதஜயைத் தா - ஓம்....

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்கத்
தேவையெல்லாம் அடைய
அம்மம்மா தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிடப் பாடியுருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை - ஓம்....
இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரம் அருள்வாய்
அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்
கரங்குவித்தோம் இனிக் காலை விடோமடி
கருணையுடன் அணைப்பாய் - ஓம்...
காசின் எங்கும் வேற்றுமைபோக
கருத்தினுள் அன்பருள்வாய்
அம்மம்மா கருத்தினுள் அன்பருள்வாய்
தேசுடன் வாழவழி காட்டிடுவாய் ரஸ
தேவியுடன் ததிப்போம். - ஓம்....

நமஸ்காரம் கூறிக் கருத்தினில் ஞான
நல்லொளி தீபம்வைத்து
ஞான நல்லொளி தீபம்வைத்து
நமஸ்காரம் செய்து ஆரத்திசெய்தோம்
ஞாலத்திற் கமைதியைத் தா - ஓம் ....
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
சுந்தரவதனி சுகுண மனோகரி
மந்தகாசமுக மதிவதனி
சந்தன குங்கும அலங்கார முடனே
தந்திடுவா யுந்தன் தரிசனமே
நந்தி தேவருடன் முனிவரும் பணிய
ஆனந்தமுடனே வந்திடுவாய்
வுந்தனைசெய்துமு மாயன் அயனுடன்
வகையாய் உன்புகழ் பாடிடவே

தங்கச் சிலம்பு சலசலவென்றிட
தாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட
பொங்கு மானந்தமுடன் புவிமேல் விளங்கும்
மங்கள நாயகி மகிழ்வாய் வருவாய்
வேதங்கள் உன்னை வேண்டிப் பாடிட
வுpரும்பிச் சரஸ்வதி வீணை வாசித்திட
ஸதானந்தமான சோதிஸ்வரூபி
ராஜ ராஜேஸ்வரி சரணம் சரணம்
கற்ப+ரநாயகியே சரணம் சரணம்
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோயில் கொண்ட சிவகாமியம்மா
ப+விருந்த வல்லி சிவகாமியம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோயில் நானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்
பக்திகொடு கையுனையே கூடவேண்டும்
எண்ணமெல்லாம் உன்னினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும்.
காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கயிராகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லாத் தாயேயுன்னை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை.

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகித் திரியம்பகி எழிற்
புங்கவி விளங்கு சிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி யென்றுன்
நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
நானுச்சரிக்க வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணியெனப் புகழ
ஆகிலாண்ட கோடியீன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே
வரைராயனுக் கிருகண் மணியாயுதித்த மலை
வுளர் காதலிப் பெண் உமையே.

No comments:

Post a Comment